புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா
தொடு வால் கூறே நெடுநாள் போரே முடிவிகைக் காண தீர்வே வா வா
துடித்திடும் ஏரே பயமறியாதே வெடித்திடும் கிடங்கே நீ தான் வா வா
மழைத்துளி பிரிவதில்லை கடலாய் எழுமே
விடுதலைப் பிறந்தப்பின்னே உனக்கேன் பயமே
கத்தும் கத்தும் கடல் போல் எங்கள் உள்ளம் இருக்கும்
காதை மூடி கிடந்தால் ஊரே தூளாய் வெடிக்கும்
நாளை நம் தலைமுறைகள் பகை நீங்கி வாழட்டுமே அலை மேல் மிதக்கும் நிலவாய்
புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா
ஒளித்திறல் உடைவதில்லை கரையை தொடுமே
தடை வரும் நிலைகள் இங்கு ஒளி போல் எழுமே
காடே சுற்றி எரிந்தும் ஆற்றில் மீன்கள் பிழைக்கும்
வாழ்வில் மொத்தம் இழந்தும் எங்கள் பிள்ளை ஜெயிக்கும்
வாழ்வெங்கும் இரவாக ஒரு போதும் வருவதில்லை உனையே துணையாய் தருவாய்
புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா