கொஞ்சி-கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே, உருகாதே நெஞ்சமே
உச்சி நிலா நேரத்தில் வந்தியே
நட்சத்திர தூரத்தில் மின்னியே
தரை மேலே தவித்தேனே நித்தமே
அட, ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கெடைக்குமா?
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா?
என் பூமியெங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா?
எப்போது என் உசுர பாப்பேன்? நீயே வந்து சொல்லு
கொஞ்சி-கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே, உருகாதே நெஞ்சமே
உனக்குள்ளே நான் வாழ்கிறேன்
உயிருடன் தோள் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம்தான்
ஒரே நிலா உன்னோடுதான்
கடவுளின் புனைபெயர் தாயாகும்
காதலின் புனைபெயர் நீயாகும்
அலைகளில் தொலைந்தது என் பாதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும்
கொஞ்சி-கொஞ்சி காதலை சொன்னியே
எஞ்சி மனம் தேடுது உன்னையே
அணைக்காமல் அணையாதே நெஞ்சமே
ஓ, உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னியே
தரைமேலே எனை நானே தந்தேனே
அட, ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கெடைக்குமா?
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா?
என் பூமியெங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா?
எப்போது என் உசுர பாப்பேன்? நீயே வந்து சொல்லு

