உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
சிலை வணக்கம் செய்த அரபு நாட்டிலே
சீர்திருத்தச் சேவை செய்த வல்லவர்
தலைசிறந்த ஏகதெய்வ வீட்டிலே
தரணி வாழ வழி வகுத்துத் தந்தவர்
கலை வளர்த்த காவலர் நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
கோடி கோடி செல்வம் தந்த போதிலும்
கொண்ட கொள்கை மாறிடாமல் நின்றவர்
கோடி கோடி செல்வம் தந்த போதிலும்
கொண்ட கொள்கை மாறிடாமல் நின்றவர்
ஆடையின்றி பெண்கள் அந்த நாளிலே
அலைந்திருந்த மடமை நீக்கி வென்றவர்
ஈடில்லாத போதகர் நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
துன்பம் வந்து தொல்லை தந்த போதிலும்
துணிவு கொண்டு நீதி சொன்ன வல்லவர்
துன்பம் வந்து தொல்லை தந்த போதிலும்
துணிவு கொண்டு நீதி சொன்ன வல்லவர்
பண்புக்கெட்டு போர் புரிந்த மாந்தரை
அன்பினாலே மாற்றி வைத்த நல்லவர்
இன்ப வாழ்வு தந்தவர் நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்


