அனிச்சமே, சகி ஊடலே
தீரா-தீரா தேடலே
ஓ, அளவில்லா என் இனிய மோதலே
உன்னோடு வாழ்வேனே நானே, நானே
நீயும் நானும் பேசா நேரம் காதல் பேசும்
இடைவெளிகள் இருந்தும் இயலாய் பேசும் நேசம்தானே
நூலில் ஆடும் பொம்மை போலே வாழ்க்கைதானே
மெல்லருளாய், அழகாய், அசைக்கும் விரலாய் காதல்தானே
சிந்தூரி நீ, சிந்தாமணி
சில்லாகிப் போனாலும் யாவும் நீயே
கல்லாழி நீ, கண்ணின் மணி
கல் மீதும் பூப்பூக்கும் புல் வேட்கை நீயே
வானம் நம்மல வாழ சொல்லுது, வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே
ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது, வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே
நீ பேசாமல் போனாலும் நான் பேசுவேன்
என் கண்ணீரில் சொல்லாடுவேன்
நீ கேட்காமல் போனாலும் நான் பாடுவேன்
உன் விண்மீனை தாலாட்டுவேன்
ம்ம், நீ மாறாமல் போனாலும் நான் மாறுவேன்
உன் கோபங்கள் நான் தாங்குவேன்
நீ தேடாமல் போனாலும் நான் தேடுவேன்
உன் பாதத்தில் கண் மூடுவேன்
வானம் நம்மல வாழ சொல்லுது, வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே
ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது, வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே
(காதலே) வானம் நம்மல வாழ சொல்லுது, வாடி சுந்தரியே
(ஆணின் தாய்மையே) கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே
(தீரா காதலே) ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது, வாடி சுந்தரியே
(பெண்ணின் ஆண்மையே) கல்லா நிக்கிறியே, கல்லா நிக்கிறியே

