கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
ஒன்கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன?
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா?
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன?
ஒத்துமையா நாமும் போக இது நேரமா?
தூவக்கால தேச்சுவெச்ச துரு ஏறுமா?
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா
சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும்கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்துதான் பேசி எதுக்கு சடபின்னுற?
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன?
எங்கவேணா போயிக்கோ நீ
என்னவிட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா
தரமேல தல சாயுமே
மறஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட-தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க-பாக்கத்தான் இன்பமே
நீ பாக்காம போனாலே கிடையாது மறுசென்மமே
கூடமேல கூடவச்சி கூடலூரு, கூடலூரு போறவளே
ம்ம், நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன?
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா?
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா



