வா வெளிய பார் ஒலகம் உன் ஒலகமே மாற
வான் முழுக்க நீ பறக்க வா பழையச் சிட்டே
உன் ஒதட்டுல சிரிப்ப யார் வெதச்சதோ?
புதுசா விழியில் நீர் சுரக்குதோ?
முன்னொரு காலத்துல
வெள்ளந்தி கோலத்துல
நீ கண்ட ஈரமெல்லாம்
நெஞ்சில கசியிதா?
ஆடாத ஆட்டம் இல்ல
உன்ன பேசாத பேச்சும் இல்ல
உள்ள ஏதேதோ கண்ட பின்னே
வந்து நின்னாயோ ஓரத்துல
ஆகாசம் தாலாட்டுதா?
உன்ன உன் நெஞ்சம் பாராட்டுதா?
சந்தோஷம் சீராட்டுதா?
கண்ணீரில் நீராட்டுதா?
உள்ளார-உள்ளார கதவு தொறக்குதா?
சொல்லாம கொள்ளாம மனசு இனிக்குதா?
உன் மனைவி, உன் கொழந்த பூ மொகத்த நீ பாரே
நீ சிரிக்க போய் அணைக்க தீயணையும் உள்ளே
உன் இருட்டுல வெளிச்சம் யார் குமிச்சதோ?
முடியாக் கிழத்தில் கால் நடக்குதோ?
இறுக்கமெல்லாம் எழகிடுச்சா?
மயிலிறகா மனமே மெதக்குதா?
உனக்குள்ளதா சிறு குழந்த பிறக்குதா?
கருணையே குடும்பமா தெரியுதா?



